முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி..!!! 8 மாவட்டங்களில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

04:40 PM May 15, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமாக மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மேற்குறிப்பிட்ட 8 மாவட்டங்கள் மட்டுமின்றி, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வரும் கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம்.

டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். இதில் டென்- 1 (DENV-1) உட்பட 4 வகையான காய்ச்சல்கள் உண்டு. நல்ல தண்ணீரில் ஏடிஸ் ஏஜிப்தி வகையைச் சார்ந்த கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும். சுமார் 70 நாட்களுக்கு இந்த வைரஸ் உயிர் வாழும் என்பது மட்டுமின்றி, 500 மீட்டர் தூரம் வரை பரவும் தன்மை உடையது என்பதால், இது மக்களை எளிதில் தாக்கக்கூடியது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் நோய்வாய்ப்படவைக்கும்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

* கடுமையான வயிற்று வலி

* தொடர் வாந்தி

* விரைவான சுவாசம்

* ஈறுகளில் இரத்தம் கசிதல்

* உடற்சோர்வு

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில், வீடு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பயனற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொளவது நல்லது.
குடிநீர் தொட்டிகளை சரியாக மூடி வைத்திருப்பதுடன், தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : EPFO கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்..!! உங்களுக்கு சேர்ந்துவிட்டதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

Advertisement
Next Article