முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்!. தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல்!. தினமும் 5,000 பேருக்கு சிகிச்சை!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Shock!. Dengue and blue fever will increase in Tamil Nadu! Treating 5,000 people daily!
08:58 AM Oct 03, 2024 IST | Kokila
Advertisement

Dengue: தமிழகத்தில் டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளால், தினமும் சுமார் 5,000 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் பாதிப்புகளால், ஏராளமானவர்கள் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். ப்ளூ' வைரஸ்களால் பரவும், 'இன்ப்ளுயன்ஸா' காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. எனவே, இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.

இதுகுறித்து பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது, மிதமான பாதிப்புகள் இருப்பவர்கள், 'ஆன்ட்டி வைரல்' மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ எடுக்க தேவையில்லை. அவர்கள் ஓய்வெடுப்பதுடன், ஆவி பிடிக்க வேண்டும். துளசி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவற்றை சாப்பிட்டாலே போதுமானது.

அதே நேரம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரைப்படி, 'ஓசல்டாமிவிர்' என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம். பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிவது நல்லது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Readmore: அரசியல் சண்டையில் என்னை இழுக்காதீர்!. அமைச்சரை அலறவிட்ட சமந்தா!. விவாகரத்து கருத்துக்கு கண்டனம்!

Tags :
Blue feverDengueIncreaseTamil Nadu
Advertisement
Next Article