முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்!. பூரி ஜெகநாதர் கோவில் சுவரில் விரிசல்!. தொல்லியல் துறையை நாடிய ஒடிசா அரசு!

Odisha govt seeks ASI help as cracks appear in boundary wall of Puri Jagannath temple
05:50 AM Nov 04, 2024 IST | Kokila
Advertisement

Puri Jagannath Temple: பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலின் எல்லைச் சுவரான மேகநாதா பச்சேரியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்ய ஒடிசா அரசு இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) உதவியை நாடியுள்ளது.

Advertisement

உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் திருக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரை மிகவும் பிரசித்தமானது. ஆஷாட மாதத்தில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில், ஜெகநாதர் கோவிலின் எல்லைச் சுவரான மேகநாதா பச்சேரியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்ய ஒடிசா அரசு இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) உதவியை நாடியுள்ளது.

கோவில் வளாகத்திற்குள் உள்ள ஆனந்தபஜாரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த விரிசல் வழியாக வெளியேறுவதாகவும், சுவரின் சில பகுதிகளில் பாசிகளின் திட்டுகள் தோன்றுவதாகவும் கோவில் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் 12ஆம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவிலின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகம் (SJTA) சுவரில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு ASI-யை வலியுறுத்தியுள்ளது.

Readmore: காசநோயை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு.. WHO அங்கீகாரம்..! – மோடி வாழ்த்து..!!

Tags :
archeology departmentCrack in the wallodisha governmentPuri Jagannath Temple
Advertisement
Next Article