ஷாக்!... மீண்டும் தலைதூக்கும் பறவைக் காய்ச்சல்!… வாத்துகள், கோழிகளை கொல்ல அரசு முடிவு!
Bird flu: கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் வாத்துகள், கோழிகளை கொல்ல அரசு முடிவெடுத்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே நிரணம் பகுதியிலுள்ள அரசுப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஒரு சில தினங்களில் இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து இறந்தன. இதனால் நேற்று பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பிரேம் சங்கர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் நோய் பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்ட பகுதியில் 1 கிமீ சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகள், கோழிகள் உள்பட வளர்ப்பு பறவைகளை கொல்ல ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்றுகாலை முதல் நடைபெறும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: புழுதிப்புயல் கோரத்தாண்டவம்!… ராட்சத பேனர் விழுந்ததில் 8 பேர் பலி!… 64 பேர் படுகாயம்!