For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஷாக்!… மாட்டிறைச்சியில் பறவைக் காய்ச்சல்!… சாப்பிட பாதுகாப்பானதா?... பீதியில் நடுங்கும் அமெரிக்கா!

08:05 AM May 25, 2024 IST | Kokila
ஷாக் … மாட்டிறைச்சியில் பறவைக் காய்ச்சல் … சாப்பிட பாதுகாப்பானதா     பீதியில் நடுங்கும் அமெரிக்கா
Advertisement

Bird Flu: நோய்வாய்ப்பட்ட மாட்டிறைச்சியில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில், இறைச்சி சாப்பிட பாதுகாப்பானது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கடந்த மார்ச் மாத இறுதியில் அமெரிக்காவில் உள்ள கோழிகள் மற்றும் பசுக்களுக்கு பறவைக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், பசும்பாலிலும் இந்த தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, டெக்சாஸ் மாகாணத்தில் பால் பண்ணையில் பணியாற்றும் தொழிலாளிக்கு ஏப்ரல் மாதம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாகக் கூறியது.

இதையடுத்து, கடந்த புதன்கிழமை மிச்சிகனில் உள்ள பால் பண்ணை பணியாளர் ஒருவருக்கு இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்தநிலையில், நோய்வாய்ப்பட்ட கறவை மாட்டின் மாட்டிறைச்சியில் பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை (யுஎஸ்டிஏ) நேற்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் மாட்டிறைச்சி உண்ணுவதற்கு பாதுகாப்பாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. யுஎஸ்டிஏவின் கூற்றுப்படி, இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் வழக்கமான பரிசோதனையின் போது நோய் அறிகுறிகளை அரசு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, 96 கறவை மாடுகளை சோதனை செய்ததில் ஒரு பசுமாட்டுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும், மாட்டிறைச்சியை 165 டிகிரி ஃபாரன்ஹீட் (73.9 செல்சியஸ்) உள் வெப்பநிலையில் சூடாக்கினால், அது ஈ.கோலி மற்றும் பிற வைரஸ்களைப் போலவே அதைக் கொல்லும் என்று USDA கூறுகிறது. புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் ஒன்பது இடங்களில் 52 மந்தைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.2022ல் மாட்டிறைச்சியில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Readmore: பூமியை போன்று மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு!… மனிதர்கள் வாழ மிகச் சிறந்தது!… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Advertisement