மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிர்ச்சி..!! நிலக்கரிகளை தேக்கும் பங்கர் டேங்க் சரிந்து விபத்து..!! இருவர் சடலமாக மீட்பு..!! இன்னும் எத்தனை பேர்..?
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இயங்கி வரும் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கியதாக தகவல் வெளியானது. அதில் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாயமான 2 பேர் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், இருவர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.
நிலக்கரிகளை தேக்கும் பங்கர் டேங்க் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தமாக அந்த இடத்தில் 8 பேர் பணியாற்றி வந்துள்ளனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் நிலக்கரி குவியலுக்குள் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முழுமையான மீட்புப்பணிகளுக்குப் பிறகே எத்தனை பேர் உள்ளே சிக்கி உள்ளனர் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் 840 மெகாவாட் அனல் மின்நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : சென்னைக்கு மீண்டும் தீவிர மழை எச்சரிக்கை..!! டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து..!! வானிலை மையம் வார்னிங்..!!