நடுவானில் விமானம் மீது மின்னல் தாக்கிய அதிர்ச்சி!. அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பீதி!. வைரல் புகைப்படங்கள்!
Lightning Plane: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருந்து ஹுர்காடா நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மீது மின்னல் தாக்கியதையடுத்துஅவசர அவசரமாக தரைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பிரஸ்ஸல்ஸில் இருந்து ஹுர்கடா நோக்கி பயணித்த TUI விமானம் நடுவானில் மின்னல் தாக்கியது. இதையடுத்து, பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. TUI செய்தித் தொடர்பாளர் Piet Demeyere கூறுகையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தரையிறங்கிய பிறகு, திங்கள்கிழமை வேறு விமானத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது, அதைத் தொடர்ந்து வெளிச்சம் வந்தது. அதன்பிறகு, எங்களுக்கும் லேசான எரியும் வாசனை வந்தது என்று கூறினார். இதேபோல், மற்றொரு சம்பவத்தில், கத்தாருக்குச் சென்ற சரக்கு விமானம் மீதும் நடுவானில் மின்னல் தாக்கியது. பிரஸ்ஸல்ஸ் ரிங் ரோட்டில் ஒரு காரில் இருந்து எடுக்கப்பட்ட டாஷ்கேம் காட்சிகள் வெளியாகியுள்ளன. விமானப் பயணத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அசாதாரணமானது அல்ல. இந்த ஆண்டு ஜூலை மாதம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தை நெருங்கும் போது மின்னல் தாக்கியது.
எத்தனை முறை விமானங்கள் மின்னலால் தாக்கப்படுகின்றன?
'திஸ் இஸ் யுவர் கேப்டன் ஸ்பீக்கிங்' புத்தகத்தின் ஆசிரியர் டக் மோரிஸ் விளக்கினார், அதாவது "ஒரு விமானம் ஒவ்வொரு 5,000 மணி நேரத்திற்கும் அல்லது வருடத்திற்கு ஒரு முறை மின்னல் தாக்குகிறது" என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
Readmore: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி அட்டவணை!.. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எங்கு, எப்போது?