அதிர்ச்சி!. நாட்டில் AI-யால் வங்கி துறையில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம்!. ப்ளூம்பெர்க் உளவுத்துறை எச்சரிக்கை!
AI: தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களினுடைய அறிமுகம் மனிதர்களுடைய வேலைப்பளுவை குறைத்து இருப்பதோடு, வேலையை முடிப்பதற்கான கால அளவையும் குறைத்து இருக்கிறது. இவ்வாறான தொழில் வளர்ச்சி தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் உற்பத்தியை மேற்கொள்ள உதவியாக இருந்தது.
ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது நிதித்துறையிலும் AI பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏஐயின் வேகமான, துல்லியமான பணிகள் காரணமாக நிதித்துறை அதன் பணியாளர்களை இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அதாவது நிதித்துறையில் பணிப்புரியும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கக்கூடும். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைகள் இழக்கப்படலாம். ப்ளூம்பெர்க் உளவுத்துறையின் கூற்றுப்படி, முக்கிய வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் வேலைகளை குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகம் மற்றும் செயல்பாட்டு துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏஐ அமைப்புகளால் பெரிய அளவிலான தரவை விரைவாக செயலாக்க முடியும் மற்றும் மனித திறன்களைவிட மிக வேகமான நுண்ணறிகளை உருவாக்க முடியும் என்பதால் தரவு பகுப்பாய்வு, நிதி வர்த்தக மதிப்பீடு, மற்றும் இடர் மதிப்பீடு போன்ற பொறுப்புகள் குறிப்பாக பாதிக்கப்படலாம்,
தலைமை தகவல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சராசரியாக 3% வேலை குறைப்பை எதிர்ப்பார்க்கிறார்கள். ப்ளூம்பெர்க் உளவுத்துறையின் மூத்த ஆய்வாளர் டோமாஸ் நோட்செல் கூறுகையில், 5% முதல் 10% வரை ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும். கூடுதலாக சிட்டிகுரூப், ஜேபி மோர்கன், கோல்டுமேன் சாக்ஸ் போன்ற முக்கிய வங்கிகள், தங்கள் பணியாளர்களில் 5% முதல் 10% வரை பணியாளர்களை குறைக்கலாம்.