ஷாக்!. கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சம்!. பீகாரில் சோகம்!
Temple crowd: பீகாரில் பாபா சித்தநாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் ஜெகநாபாத் மாவட்டத்தில் மக்தும்பூரில் பாபா சித்தநாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலில் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவல் அறிந்து விரைந்து நிகழ்விடத்திற்கு சென்ற, காவல் கண்காணிப்பாளர் திவாகர் குமார் விஸ்வகர்மா, தற்போது அங்குள்ள நிலைமயை கண்காணித்து வருகிறோம். அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார். முன்னதாக கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் சாமியார் நாராயணன் ஹரி நடத்திய ஆன்மீக நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 120க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கங்களை வென்றவர்கள் யார்?. பதக்க எண்ணிக்கை எவ்வளவு?