பேரதிர்ச்சி!. நிலச்சரிவில் 30 தமிழர்கள் சிக்கித் தவிப்பு!. ஆன்மீக சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த சோகம்!
Landslide: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆன்மிக சுற்றுலாச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் கடந்த 3ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, உத்தரகாண்ட் ஆதி கைலாஷ் என்ற பகுதியில் இருந்து மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பியபோது, தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருந்து வருவதால் அவர்கள் தொடர்ந்து வருவது பாதுகாப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. நிலச்சரிவு குறித்து உடனடியாக உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் ஆகியோர் நிலைமை தொலைபேசி மூலம் கேட்டு வருகின்றனர். மேலும், உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
Readmore: ரயில்வே வேலை வாய்ப்பு! 8000+ பணியிடங்கள்!. உடனே அப்ளை பண்ணுங்க!. முழுவிவரம் இதோ!