அதிர்ச்சி!. டீ குடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!. ராஜஸ்தானில் சோகம்!
Rajasthan: ராஜஸ்தானில் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்த டீ-யை குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அம்பாபுரா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட நல்டா கிராமத்தை சேர்ந்தவர் தரியா(53). இவரது மருமகள் சாந்தா(33. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று டீ போட்டுள்ளார். அப்போது, தவறுதலாக டீ தூளுக்கு பதிலாக கரையான் விரட்டி மருந்து( பூச்சிக்கொல்லி) மருந்தை கலந்ததாக கூறப்படுகிறது. இதனை குடித்த தரியா, மருமகள் சாந்தா, சாந்தாவின் மகன் 14 வயது அக்ஷ ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த டீயை குடித்ததில், பக்கத்துவீட்டுக்காரர் உட்பட மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அம்பாபுரா காவல் நிலைய அதிகாரி ராம்ரூப் மீனா கூறுகையில், இந்த தேநீரில், கரையான் மருந்து கலக்கப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சமையல் அறையில் கறுப்புப் பையில் கரையான் மருந்து வைக்கப்பட்டு இருந்ததும், அதுவும் தேயிலை இலை போல இருந்ததும் தெரியவந்தது. தேயிலை இலைகளுக்கு அருகில் இந்த நச்சு விரட்டியை யாராவது வைத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.
Readmore: எச்சரிக்கை!. பான் 2.0 புதுப்பிக்க போன், மெசேஜ் வந்தால் பதிலளிக்க வேண்டாம்!. அரங்கேறும் மோசடிகள்!