ஷாக்!… ஒரே வாரத்தில் 25,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!… புதிய அலையின் தொடக்கம்!
Corona: சிங்கப்பூரில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 25000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே தான் வாழ்ந்து வருகிறது என்று நிபுணர்கள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்கியுள்ளது.
அதாவது, கடந்த 5ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை மட்டும் சுமார் 25,000 மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தினமும் சராசரியாக 250 பேர் வரை கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அதில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது,இப்போது நாம் புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் விஷயங்களுக்கு சுகாதார அமைப்பு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முகமூடியை அணிய வேண்டும்” என்றார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் 60 வயதிற்கு பட்ட மக்கள் கூடுதல் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங் தெரிவித்துள்ளார்.
Readmore: கண்கலங்கிய தல தோனி!… இதுதான் கடைசியா!… பிளே ஆஃபை இழந்ததால் சோகம்!…