For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி!… 2000 பேர் பலி!… 4 மடங்கு அதிகரித்த டெங்கு பரவல்!

05:53 AM May 02, 2024 IST | Kokila
அதிர்ச்சி … 2000 பேர் பலி … 4 மடங்கு அதிகரித்த டெங்கு பரவல்
Advertisement
Dengue: கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் 4 மடங்கு அதிகரித்துள்ள பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரை மிக எளிதாக பாதிக்கக் கூடிய டெங்கு, கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைப்பதில்லை.இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை.

Advertisement

எனவே இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.அதன்படி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் அவர்களில் சுமார் 2000 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Readmore: உஷார்… நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நம்பர் பிளேட் கட்டுப்பாடு…!

Advertisement