ஷாக்!. பன்றிக்காய்ச்சலால் மேலும் 2 பேர் பலி!. கேரளாவை அலறவிடும் வைரஸ்!
Swine flu: கேரளாவில் கடந்த 3 நாள்களில் பன்றிக் காய்ச்சல் பாதித்து 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் நம்மைப் படுத்திய பாட்டிற்குப் பின்னர், அனைத்து நோய்களையும் நாம் எச்சரிக்கை உடனேயே கவனித்து வருகிறோம். ஆங்காங்கே ஏற்படும் நோய் பரவலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் தான் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு மங்கி பாக்ஸ் பரவியது. இதை உலக சுகாதார அமைப்பும் கூட பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்தது.
இந்தச் சூழலில் கடந்த 2022ம் ஆண்டு நமது அண்டை மாநிலமான கேரளாவில் வயநாட்டில் இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் உறுதியானது. அங்கு அடுத்தடுத்து சுமார் 44 பன்றிகள் இந்த நோய்க்கு உயிரிழந்தன. இதையடுத்து படிப்படியாக வைரஸ் பரவிய வரும்நிலையில், முன்னெச்சரிக்கையாகப் பண்ணைகளில் உள்ள பன்றிகளைக் கொல்லும் பணியில் சுகாதாரத்துறை நடைவடிக்கை எடுத்துவருகிறது. இதுமட்டுமல்லாமல், கேரளாவில் கடந்த சில வாரங்களாக டெங்கு, எலிக்காய்ச்சல், வெஸ்ட் நைல் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உட்பட நோய்கள் பரவி வருகின்றன. சுகாதாரத் துறை சார்பில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நோய் பரவல் குறையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்த சைபுன்னிசா(47) என்ற பெண் பன்றிக் காய்ச்சல் பாதித்து திருச்சூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இந்தநிலையில் எர்ணாகுளம் அருகே உள்ள லியோன் என்ற (4) வயது சிறுவன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று காலை உயிரிழந்தான். இதையடுத்து கேரளாவில் கடந்த 3 நாள்களில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.