For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஷாக்!… 2 மணிநேரத்தில் 16 பேர் பலி!… வெயில் காரணமாக வட இந்தியாவில் தொடரும் சோகம்!

06:05 AM May 31, 2024 IST | Kokila
ஷாக் … 2 மணிநேரத்தில் 16 பேர் பலி … வெயில் காரணமாக வட இந்தியாவில் தொடரும் சோகம்
Advertisement

Heat: வட இந்தியாவில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பீகாரில் உள்ள மருத்துவமனையில் 2 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பீகார், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை வீசி வருகிறது. குறிப்பாக டெல்லியில் இதுவரை இல்லாத அளவில் 126 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அனல் தகித்ததன் காரணமாக அனைவரும் ஏ.சி.யை ஓடவிட்டதால் டெல்லியில் மின்சாரத்தின் தேவை 8,302 மெ.வாட் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்தநிலையில் பீகாரில் உள்ள மருத்துவமனையில் 2 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் அவுரங்கபாத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த 16 பேர் அடுத்தடுத்து 2 மணிநேரத்தில் உயிரிழந்தனர். நேற்றைய தினம் பீகாரின் அவுரங்காபாத் நகரில் அதிகப்படியாக 48.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும், பீகாரில் இன்னும் ஒருவாரம் அதிகப்படியான வெயில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளநிலையில், பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பஅலை மற்றும் வெயில் காரணமாக மதிய வேளைகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: “இந்து-முஸ்லிம் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது!!” : நீதிமன்றம்

Tags :
Advertisement