அதிர்ச்சி!. நிலச்சரிவில் சிக்கிய 1500 பேர்!. 6 பேர் பலி!. இடைவிடாத கனமழையால் கடும் அவதி!
Landslide: சிக்கிம் மாநிலத்தில் பெய்துவரும் இடைவிடாத கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆங்காங்கே 1500 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மாங்கன் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் சேதமடைந்தன. சங்கலாங்கில் புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் இடிந்து விழுந்தது, சாலைகளில் பாறைகள் மற்றும் மண் குவியலால் போக்குவரத்து தடை பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் மின் கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன.
இதனிடையே பக்ஷெப் பகுதியில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே 1500 பேர் சிக்கி தவிப்பதாகவும், இவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அம்மாநில அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் பெமா காண்டுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். " பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீட்பு உதவி, தற்காலிக தீர்வு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று தமாங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இமயமலை மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 50 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: மேடையில் அமித் ஷா பேசியது என்ன…? எக்ஸ் தளத்தில் தமிழிசை விளக்கம்..!