ஷாக்!. 24 மணிநேரத்தில் 1,340 ரஷ்ய வீரர்கள் பலி!. உறுதி செய்த உக்ரைன்!
போர் பதற்றங்களுக்கு மத்தியில் 24 மணிநேரத்தில் 1,340 ரஷ்ய வீரர்களை கொன்று விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா மறைமுகமாக உதவி செய்து வருகிறது. அதாவது வடகொரியா 1.2 மில்லியன் துருப்புகளைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.
போரை கைவிட பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,340 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது நடந்து வரும் மோதலின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை 6.78 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்துவிட்டதாகவும், இதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு சொந்தமான 9,047 ராங்கிகள், 18,111 கவச வாகனங்கள், 19,565 பீரங்கிகள், 369 போர் விமானங்கள், 329 ஹெலிகாப்டர்களை அழித்து விட்டதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்யா இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: போலீஸ் என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..!! – மகாராஷ்டிராவில் பரபரப்பு