For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஷாக்!... 100 பேர் பலி!… புயல் வெள்ளத்தில் மிதக்கும் நாடுகள்!… கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை!

05:26 AM Apr 17, 2024 IST | Kokila
ஷாக்     100 பேர் பலி … புயல் வெள்ளத்தில் மிதக்கும் நாடுகள் … கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை
Advertisement

Pakistan: புயல், வெள்ளம் மற்றும் கனமழையில் சிக்கி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இதுவரை நுற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பாகிஸ்தானில் கனமழை மேலும் நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல், வெள்ளம், இடி மின்னல் தாக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில், பாகிஸ்தானின் தென்மேற்கு கோதுமை அறுவடை செய்யும் விவசாயிகள் மீது மின்னல் தாக்கியதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, திங்கட்கிழமை அவசரகால நிலையை அதிகாரிகள் அறிவித்தனர்.

பஞ்சாபில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேரும், ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மேலும் 21 பேரும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழையில் சிக்கி தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். மழையால் வடமேற்கு மற்றும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் டஜன் கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வடமேற்கு நகரமான பெஷாவர் மற்றும் பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடுமையான புயல்களால் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், அவசர சேவைகளை விழிப்புடன் இருக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வரும் வியாழனன்று பெய்யும் அதிக மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆப்கானிஸ்தானிலும் பருவக்கால மழையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழையால் நாட்டின் 34 மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கையை இழந்த 23,000 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

Readmore: நீங்கள் கடன் இல்லாத வாழ்க்கை வாழ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க..!! மறந்துறாதீங்க..!!

Advertisement