அதிர்ச்சி!. ஒரே IMEI எண்ணுடன் 1.5 லட்சம் போலி ஃபோன்கள் கண்டுபிடிப்பு!.
IMEI: வங்கதேசத்தில் ஒரே IMEI எண்ணுடன் 1.5 லட்சம் போலி ஃபோன்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
IMEI (சர்வதேச மொபைல் சாதன அடையாளம்) எண் தொலைந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் தனித்துவமான 15 இலக்க எண்ணாகும். அந்தவகையில், ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது. இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது.
இந்தநிலையில், வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணுடன் ஒன்றரை லட்சம் ஃபோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஃபோன்கள் அனைத்தும் போலியானவை,” என்று கருத்தரங்கு ஒன்றில் பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சில ஆண்டுகளாக, 8 லட்சம் மொபைல் போன்கள் ஒரே IMEI எண்ணுடன் ஒரு ஆபரேட்டரின் வலையமைப்பில் ஒரே நேரத்தில் இயங்குவதாகவும் வங்காளதேசத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஏ.கே.எம்.முர்ஷித் குறிப்பிட்டார். ஒரே IMEI எண்ணைக் கொண்ட பல மொபைல் போன்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு செயல்பட முடியும் என்பது பற்றிய கவலையை இது எழுப்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
போலி கைபேசிகள் தயாரிக்கும் சில சட்டவிரோத தொழிற்சாலைகளில் டாக்கா பெருநகர காவல்துறை (டிஎம்பி), சமீபத்தில் சோதனை நடத்தியது. "சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல்களை நகலெடுத்து கைபேசிகள் தயாரிக்கும் ஒரு போலி தொழிற்சாலையை 2020 ஆகஸ்டில் நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று டாக்கா பெருநகர காவல்துறையின் சைபர் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவின் கூடுதல் துணை ஆணையர் முகமது ஜுனைத் ஆலம் சர்க்கார் தெரிவித்தார்.
Readmore: ஷாக்!. உண்ணிகளால் ஏற்படும் நோய்களின் பரவல் அதிகரிப்பு!. நிபுணர்கள் எச்சரிக்கை!