’அவள் எல்லாம் வெறும் பிசிறு தான்’..!! ’வளர விடக் கூடாது’..!! காளியம்மாள் குறித்து சீமான் பரபரப்பு பேச்சு..!!
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களவை தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக காளியம்மாள் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்திருக்கிறார். சீமான் அளித்துள்ள விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் சீமான், காளியம்மாளை விமர்சனம் செய்வது போல் இடம்பெற்றிருந்தது. அதில், காளியம்மாள் எல்லாம் தட்டி விடலாம். அவர் பெரிய ஆள் இல்லை. அவர் ஒரு பிசிறு. அவர் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்து ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. இந்த ஆடியோ வெளியான சமயத்தில், அக்கட்சியினர் பலர் மறுத்தனர். அதாவது இதை சீமான் பேசவில்லை என்று கூறினர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு சீமான் விளக்கம் அளித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “தீடீரென இந்த வெண்ணெய்களுக்கு காளியம்மாள் மீது பாசம். டேய்… அவள்தான் மயிலாடுதுறையில் போட்டியிட்டேளே. அப்போதே அவளை ஜெயிக்க வேண்டியது தானே. வெண்ணெய்களா அப்போது ஏன் ஓட்டு போடவில்லை. அவளுக்கு வேலை பார்த்து இருக்கலாமே. நாங்கள் பிசுறுன்னு சொல்லுவோம். கொசுறுன்னு சொல்லுவோம். உங்களுக்கு என்ன பிரச்சனை.
நான் அவளை எப்படி கூப்பிட்டால் உங்களுக்கு என்ன..? நான் என்ன வேண்டுமானாலும் சொல்வேன். நீ அவளுக்கு வேலை பார்த்தாயா. உனக்கு என்ன? என்று கடுமையாக பேசியிருந்தார். சீமான் அளித்துள்ள விளக்கம் மக்கள் இடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : திருமண வரன் தேடும் பெண்களே உஷார்..!! மொத்தம் 49 பெண்கள்..!! வரதட்சணையாக சொகுசு கார், பைக்..!!