For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் இருந்து லண்டன் செல்ல ஷேக் ஹசீனா திட்டம்...! என்ன காரணம்...?

Sheikh Hasina plan to go to London from India
06:50 AM Aug 07, 2024 IST | Vignesh
இந்தியாவில் இருந்து லண்டன் செல்ல ஷேக் ஹசீனா திட்டம்     என்ன காரணம்
Advertisement

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தங்க ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்படி பல்வேறு பிரிவினருக்கு 56% இடஒதுக்கீடும், பொது பிரிவினருக்கு 44% இடஒதுக்கீடும் அமலில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

இதுதொடர்பான வழக்கை கடந்த ஜூலை 21-ம் தேதி விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தது. சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு 2 சதவீத ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டது. இதன்படி கல்வி, அரசுப் பணிக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. எஞ்சிய 93 சதவீதம் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது.

இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்திய 6 பேரை போலீஸார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், மாணவர் சங்கமூத்த தலைவர்கள் நஷித் கான், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜும்தார் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வலுத்தது. பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் டாக்கா உட்பட நாடுமுழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், 14 போலீஸாரை படுகொலை செய்தனர். டாக்காவில் 2 முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாட்டுப் பிரதமர் தனி விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் தங்க ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ஹசீனாவின் சகோதரி ரேஷானாவின் மகள் துலிப் சித்திக் லண்டனில் வசித்து வருகிறார். ஆளும் தொழிலாளர் கட்சியின் எம்பியாக இருக்கும் அவர், கருவூல பொருளாதார செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். ரேஹானாவும் இங்கிலாந்து குடியுரிமையை பெற்றிருக்கிறார். எனவே, ஷேக் ஹசீனா அவர்களோடு லண்டனில் தங்க திட்டமிட்டிருக்கிறார்.

Tags :
Advertisement