முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'ரூ.50 லட்சம் கொடு.. இல்லையென்றால்..' பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகானுக்கு கொலை மிரட்டல்..!!

Shah Rukh Khan Receives Death Threat, Case Registered In Mumbai Against Caller Who Demanded ₹50 Lakh
02:23 PM Nov 07, 2024 IST | Mari Thangam
Advertisement

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அழைப்பு விடுத்தவருக்கு எதிராக பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா காவல்துறையினர் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பைசான் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக ஷாருக்கான் சார்பில் பாந்த்ரா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அச்சுறுத்தல் வந்த எண் மூலம் அந்த லொக்கேஷனை குழு கண்டறிந்துள்ளது. அந்த நபர் தன்னை "இந்துஸ்தானி" என்று அடையாளம் காட்டி ரூ. 50 லட்சம் கேட்டுள்ளார். ஷாருக்கானிடம் ரூ. 50 லட்சம் கொடுக்கச் சொல்லுங்கள். இல்லை என்றால் அவரை கொன்றுவிடுவோம்., என கூறியுள்ளார். முன்னதாக சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும், அப்படிச் செய்யாவிட்டால் அவரைக் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதன்கிழமை, ராஜஸ்தானின் ஜலோரைச் சேர்ந்த ஒருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். சல்மான்கானுக்கும் நவம்பர் 5ம் தேதி மிரட்டல் அழைப்பு வந்தது. மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நடிகர் சல்மான் கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; சமரசத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது..!! – உச்ச நீதிமன்றம்

Tags :
Bollywood superstar Shah Rukh KhanDeath ThreatMumbaiShah Rukh Khan
Advertisement
Next Article