For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்துருக்காங்க’..!! 'மலையாள சினிமாவை அப்படி சொல்லாதீங்க’..!! நடிகை ஊர்வசி பரபரப்பு பேட்டி..!!

08:54 AM Aug 28, 2024 IST | Chella
’எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்துருக்காங்க’      மலையாள சினிமாவை அப்படி சொல்லாதீங்க’     நடிகை ஊர்வசி பரபரப்பு பேட்டி
Advertisement

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை மலையாளத்தில் பெரிய பூகம்பத்தை கிளப்பிய நிலையில், நடிகை ஸ்ரீலேகா மித்திரா, சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். இதையடுத்து, அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சங்க தலைவர் மோகன்லாலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை ஊர்வசி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ”கேரளாவில் நடக்கக்கூடிய பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் என்பது வட இந்தியாவை ஒப்பிடுகையில் குறைவு தான். இது மலையாள சினிமா மட்டும் அல்ல. ஆணோ, பெண்ணோ சேர்ந்து இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் இது நடக்கிறது. நாம் செல்லக்கூடிய பேருந்து அல்லது ரயில்களில் இது போன்ற விஷயங்கள் நடக்கவில்லையா?

கோலிவுட்டில் இது போன்ற விஷயங்களை யாரும் முன்வந்து சொல்லவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு மலையாள சினிமாவை மோசமானது என்று சொல்லாதீர்கள். என்னுடைய சினிமா வாழ்க்கை தமிழில் இருந்து தான் தொடங்கியது. எனக்கு பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள் வரவில்லை என்று என்று சொல்லவில்லை. ஆனால், அந்த சமயத்தில் என்னுடைய குடும்பம் என் பக்கம் இருந்தது. பெண்களுக்கு பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள் மட்டும் நடக்கவில்லை.

என்னுடைய கருத்து என்னவென்றால், பெண்கள் தனியாக செல்லும் போது, தன்னுடன் ஒரு ஆணை கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி முடியவில்லை என்றால், பொது இடத்தில் வேலை சார்ந்த சந்திப்புகளை நிகழ்த்துங்கள். சினிமா என்பது மிகவும் பாதுகாப்பான இடம். எங்களை சுற்றி நூற்றுக்கணக்கான டெக்னீசியன்கள் இருப்பார்கள். அவர்களைத் தாண்டி யாரும் உங்களை அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடியாது” என்றார்.

Read More : அப்போவே ’நீயா நானா’ நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்..!! வைரலாகும் வீடியோ..!!

Tags :
Advertisement