கைதிகளை பார்க்க வரும் மனைவி, மகள்களுக்கு பாலியல் தொல்லை..? ஜெயிலரை எட்டி உதைத்து கன்னத்தில் ஓங்கி விட்ட பெண்..!! மதுரையில் பரபரப்பு..!!
மதுரை மாவட்ட மத்திய சிறை உதவி ஜெயிலராக பணியாற்றியவர் பாலகுருசாமி (வயது 52). இவர், சிறைக்கு வரும் கைதிகளின் மனைவி மற்றும் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாநகர மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த பாலகுருசாமியின் கன்னத்தில், கடும் கோபத்தில் இருந்த பெண் ஒருவர் பளார் பளார் என ஓங்கி அறைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது பெண்களுக்கு எதிரான குற்றம் புரிதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. பாலகுருசாமி குறித்து சிறைத்துறை வட்டாரம் கூறிய தகவல் தற்போது திடுக்கிட வைத்துள்ளது. மதுரை மத்திய சிறைக்கு நியமிக்கப்படும் எஸ்பிகளுக்கு டிரைவராக இருந்தவர் தான் பாலகுருசாமி.
உயர் அதிகாரிகளுக்கு டிரைவராக இருந்ததால், இவரிடம் முறைத்துக்கொண்டால் உயர் அதிகாரியிடம் கூறி மெமோ கொடுக்கச் செய்து விடுவாராம். இதனாலேயே அவருக்கு பயந்து சிறைத்துறை போலீசார் இருந்துள்ளனர். சிறைக்குள் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்துள்ளார். இவர் பெண்கள் விஷயத்தில் வீக்காக இருந்ததாக கூறப்படுகிறது. சிறைக்கு கைதியை பார்க்க வரும் அவர்களது மனைவி, மகள்களிடம் பேசி, மிரட்டி, நெருக்கம் காட்டி வந்துள்ளார்.
பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிறுமியை அழைத்துச்சென்று சில வாரம் குடும்பம் நடத்தி சிக்கி கைதான ஒருவர் சிறைக்கு வந்துள்ளார். அவரை பார்க்க வந்த மனைவியிடம் நெருங்கிப் பழகி வந்தது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்துள்ளது. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Read More : சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!