முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகைகள் மீதான பாலியல் குற்றங்கள்..!! மத்திய அமைச்சரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள்..!! கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு..!!

Why is the media asking about this? He argued with the journalists.
04:26 PM Aug 27, 2024 IST | Chella
Advertisement

மலையாள திரையுலகில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. அதாவது, ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அதில் முன்னணி நடிகரான தீலிப்புக்கு சம்பந்தம் இருப்பது தெரியவந்தது. இதனால், மலையாள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

Advertisement

அந்த குழு ஏற்கனவே அறிக்கை தயாரித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கிய நிலையில், தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தற்போது நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான், நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் இன்று பாலியல் புகார்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், நடிகைகளின் பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தும். இது பற்றி ஊடகங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், கோபத்தில் பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கி வீசினார். மேலும், சுரேஷ் கோபி மிகவும் ஆவேசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தேர்தல் ஆணையத்தில் விஜய் மீது பரபரப்பு புகார்..!! நடவடிக்கை பாய்கிறதா..?

Tags :
நடிகைகள்பாலியல் குற்றங்கள்மலையாள சினிமா
Advertisement
Next Article