முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்.! எட்டு ஆண்டுகளுக்குப் பின் பரபரப்பு கிளப்பிய பெண்

02:55 PM Nov 23, 2023 IST | 1newsnationuser4
Advertisement

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் மூவி நடிகர் மீது எழுந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு அமெரிக்காவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் ஒருவர் அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.

Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேமி ஃபாக்ஸ் (55). இவர் காமெடி நடிகராகவும் பாடகராகவும் இருந்து வருகிறார். பிரபல இசை கலைஞரான ரே சார்லஸ் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ரே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கிராமிய விருது வென்ற இசைக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் டோ என்ற பெண்மணி ஜேமி ஃபாக்ஸ் இது பாலியல் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதன்படி 2015 ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் உள்ள பார் ஒன்றில் வைத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக 8 ஆண்டுகள் கழித்து தற்போது பாலியல் புகார் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு எதிராக நியூயார்க் சர்வைவல் ஆக்ட் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் ஹாலிவுட் நடிகருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags :
actorHOLLYWOODjamiefoxxSexual Harrasment
Advertisement
Next Article