முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கள்ளக்காதலனுடன் உடலுறவு..!! நேரில் பார்த்த கணவர்..!! கொளுந்துவிட்டு எரிந்த தீ..!! நடந்தது என்ன..?

11:00 AM Dec 01, 2023 IST | 1newsnationuser6
Advertisement

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதிநகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜா (36). இவரது மனைவி ஜெயா (30). இந்நிலையில், ஜெயாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அசர் அலி (32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த கணவர் பலமுறை மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

Advertisement

இதையடுத்து, நேற்றிரவு வேலை தொடர்பாக ராஜா வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது தனது மனைவியும், அசர் அலியும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜா அவருடைய மனைவி ஜெயாவை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயா விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அசர் அலியின் ஜேசிபி வாகனங்களை ராஜா தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
lovePolicerapevirudhunagar
Advertisement
Next Article