For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்..!! EX டிஐஜி வீட்டில் நடந்த பயங்கரம்..!! கோயம்பேட்டில் அதிர்ச்சி..!!

An intensive investigation is underway into who is the broker for the sex industry? On what visa are the foreign women staying in Chennai?
11:38 AM Nov 28, 2024 IST | Chella
வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்     ex டிஐஜி வீட்டில் நடந்த பயங்கரம்     கோயம்பேட்டில் அதிர்ச்சி
Advertisement

சென்னை கோயம்பேடு மணமகள் நகர் பாரதி அவன்யூ பகுதியில் செயல்பட்டு வரும் விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் நோட்டமிட்டு திடீரென விருந்தினர் விடுதிக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 9 ஆப்பிரிக்க நாட்டு பெண்களையும், 3 ஆண்களை போலீசார் பிடித்தனர்.

Advertisement

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 3 ஆண்களும் லொகண்டோ ஆப் மூலமாக இந்த விருந்தினர் விடுதிக்கு வந்ததாகவும், வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 4 கென்ய நாட்டுப் பெண்கள், 4 டான்சானிய நாட்டு பெண்கள், ஒரு நைஜீரிய பெண் உட்பட 9 பேரை போலீசார் மீட்டனர். உல்லாசமாக இருப்பதற்காக வந்த 3 ஆண்களையும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பாலியல் தொழிலுக்கு புரோக்கர் யார்..? வெளிநாட்டு பெண்கள் எந்த விசாவில் சென்னையில் வந்து தங்கியிருக்கிறார்..? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கியிருக்கும் தனியார் விருந்தினர் விடுதி யார் என்பது குறித்து விசாரித்தபோது, ஓய்வு பெற்ற டிஐஜி ராமச்சந்திரன் என்பவரது மகன் விக்ரம் என்பவருடையது என தெரியவந்துள்ளது. அவர் வெளிநாட்டில் இருப்பதால், அவரது நண்பர் அருண் மூலமாக நிர்மலா என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணிடம் கடந்த 2010 முதல் ரூ.35,000 வாடகைக்கு விட்டுள்ளனர்.

நிர்மலா இந்த வீட்டை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இவர்களை சோதனை செய்ததில் 23 செல்போன்கள், 8 கிராம் உள்ள ஐந்து கஞ்சா பாக்கெட்டுகள், ரூ.31,000 ரொக்கம், 15 ஹூக்கா, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆப்பிரிக்க பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்களா? அல்லது முறைகேடாக விசாவில் வந்து போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : ரயிலில் பயணிகள் பயன்படுத்தும் போர்வை மாதத்திற்கு எத்தனை முறை துவைக்கப்படுகிறது..? மத்திய அமைச்சர் சொன்ன பதில்..!!

Tags :
Advertisement