முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Chennai: கடும் தண்ணீர் பஞ்சம்!… பெரும் ஆபத்தில் சென்னை!… 6 நகரங்களுக்கு எச்சரிக்கை!

06:53 AM Mar 23, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Chennai: பெங்களூரைப் போல மிகக் கடுமையான தண்ணீர் பிரச்னையை சென்னை நகரமும் சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே அக்னி நட்சத்திரம் வாட்டும் அளவிற்கு வெயில் கொளுத்துகிறது. இதனால், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. பருவ மழை பொய்த்ததாலும், மழைநீரை முறையாக சேமிக்காததாலும் இந்த வறட்சி நிலைமை உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் மிக முக்கியமான 6 பெரிய நகரங்கள் எதிர்காலத்தில் பெங்களூரைப் போல மிகக் கடுமையான தண்ணீர் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பருவமழை 1400 மி.மீ. பெய்த போதும் அங்கு 2019 ஆம் ஆண்டில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகிலேயே மிக அதிகமாக தண்ணீரை விரயம் செய்யும் நகரங்களில் முதலிடத்தை நோக்கி சென்னை மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. சென்னை மக்கள்தொகையின் தேவைக்காக தினசரி 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் பருவமழை நன்கு பெய்துள்ளது. இருப்பினும் அசாதாரணமான பருவநிலைகள், அதிகரித்துவரும் தொழிற்சாலைகள், பெருகி வரும் நகரமயமாக்கல் போன்றவற்றால் கூடிய சீக்கிரமே கடுமையான தண்ணீர் பிரச்னையை சென்னை சந்திக்கும் என்று கூறப்படுகிறது

இந்தியத் தலைநகரான டெல்லியில் ஒவ்வொருவருடமும் ஒரு பருவத்தைப் போல தண்ணீர் பிரச்னையும் வந்து விடுகிறது. டெல்லியின் முக்கிய குடிநீர் ஆதாரமான யமுனை நிதியில் கலந்துவரும் நச்சுநீராலும், அதலபாதாளத்துக்குச் சென்று விட்ட நிலத்தடி நீர்மட்டமும் குடிநீர் பிரச்னையை மேலும் கடுமையாக்கிவிட்டன.

டெல்லிக்குத் தேவையான தண்ணீரில் 6 சதவீதத்தை தில்லி குடிநீர் வாரியம், பாழாய்ப்போன யமுனை நதியில் இருந்து தான் வழங்கி வருகிறது. எஞ்சிய தேவைக்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் தண்ணீர் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தலைநகர் தில்லி நிர்வாகம் உள்ளது.

நாட்டின் பொருளாதாரத் தலைநகராக மும்பை விளங்குகிறது. மும்பையில் அதிகரித்து வரும் குடிநீர் தேவை, மோசமான பருவமழை, குறைந்துவரும் தண்ணீர் ஆதாரங்கள் ஆகிய காரணங்களால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அசுரவேக நகரமயமாக்கல், பற்றாக்குறை அடிப்படை கட்டமைப்பு வசதிகள், திறனற்ற தண்ணீர் மேலாண்மை ஆகியவை உள்ளன.

மும்பை பெருநகர முனிசிபல் கார்ப்பொரேஷன் அதன் முக்கிய நீராதாரமான 7 ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டதால் குடிநீர் சப்ளையை அடிக்கடி நிறுத்திவிடுகிறது. மும்பைக்கு மழைநீரை விட்டால் வேறு நீர் ஆதாரங்களும் இல்லை.

ஜெய்ப்பூரில் அதிகரித்து வரும் மக்கள்தொகை, பெருகி வரும் தொழில்துறை ஆகியவை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன. ராம்கார் அணைதான் ஜெய்ப்பூரின் முக்கிய நீர் ஆதாரமாகும். கடந்த ஒரு நூற்றாண்டாக ஜெய்ப்பூருக்குத் தேவையான தண்ணீரை ராம்கார் அணை வழங்கி வந்தது.

இதனிடையே 1980கள், 1990களில் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் ஜெய்ப்பூரில் நிலத்தடி நீரையே குடிநீருக்காக நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதன் காரணமாக ஜெய்ப்பூரில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென்று குறைந்து விட்டது. முடிவில் ஜெய்ப்பூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமான பதிண்டாவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அதிகளவில் தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுவதால் உண்டாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்துடன் நிலத்தடி நீரையும் பெருமளவில் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் தண்ணீர் பிரச்சினை மேலும் சிக்கலில் விழுந்துவிட்டது. சரியான தண்ணீர் பயன்பாடு இல்லாததாலும், விவசாயத்துக்கு நிலத்தடி நீரை அதிகளவு நம்பியிருப்பதாலும் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர் மிகக் கடுமையாக இறங்கிவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. லக்னோவில் அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து சுற்றுச்சூழல் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லக்னோ நகர மக்கள் பக்ரா நங்கல் அணையிலிருந்து வருடந்தோறும் விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கை பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் 750 அரசு போர்வெல்கள், 550 தனியார் போர்வெல்கள் மூலம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் உறிஞ்சப்படுகிறது. இந்த போர்வெல்களில் தண்ணீர் சுரப்பதற்கு ஏற்ற வகையில் பருவமழை பெய்வதில்லை. மேலும் கோமதி நதியும் அதன் உபரி ஆறுகளிலும் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் லக்னோவின் தண்ணீர் தேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாகவும் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது.

Readmore: Coal: இந்தியாவின் நிலக்கரி இறக்குமதியின் பங்கு 21% ஆக குறைந்துள்ளது…!

Tags :
#chennai6 நகரங்களுக்கு எச்சரிக்கைகடும் தண்ணீர் பஞ்சம்பெரும் ஆபத்தில் சென்னை
Advertisement
Next Article