தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவு..!! கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ஐகோர்ட் தீர்ப்பு..!!
நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விஷச் சாராயமான மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான மெத்தனாலை சப்ளைச் செய்த முக்கிய குற்றவாளியான சிவக்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, அதிமுக, பாஜக, பாமக சார்பில் இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Read More : 5 மாத நட்பு..!! அடிக்கடி உல்லாசம்..!! திருமணம் முடிந்த 6 மணி நேரத்தில் மைனர் சிறுமி கொலை..!! இன்ஸ்டா காதலனால் நடந்த பயங்கரம்..!!