For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேசத்துரோக வழக்கில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் மறுப்பு..!! - பங்களாதேஷ் நீதிமன்றம்

Setback for Hindu monk Chinmoy Krishna Das as Bangladesh court rejects bail plea
04:57 PM Jan 02, 2025 IST | Mari Thangam
தேசத்துரோக வழக்கில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் மறுப்பு       பங்களாதேஷ் நீதிமன்றம்
Advertisement

இஸ்கான் அமைப்பின் முன்னாள் பாதிரியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரின் ஜாமின் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisement

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக ‘இஸ்கான்’ எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, ‘சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே’ என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனு, சாட்டோகிராம் நீதிமன்றத்தில் டிச.,12 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி சைய்புல் இஸ்லாம் மறுத்து ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என்று சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிபதி சைபுல் இஸ்லாம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 30 நிமிட விசாரணைக்குப் பிறகு இஸ்கான் முன்னாள் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்க சட்டோகிராம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவர் சார்பில் 11 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு ஆஜராகி வாதாடினர். சாட்டோகிராம் மெட்ரோபொலிட்டன் செஷன்ஸ் நீதிபதி எம்.டி சைபுல் இஸ்லாம், இரு தரப்பு வாதங்களையும் சுமார் 30 நிமிடங்கள் கேட்டபின் ஜாமீன் மனுவை நிராகரித்ததாக, உத்தரவிட்டார்.

Read more ; “எல்லாம் 200 கோடி பணத்திற்காக தான்..” ஸ்ரீதேவியின் மரணம் தெளிவாக திட்டமிடப்பட்ட சதி… பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்..

Tags :
Advertisement