டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. ஆம் ஆத்மி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகல்! இதுதான் காரணம்..
டெல்லி மாநில அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கைலாஷ் கெலாட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். டெல்லியில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்துள்ள சம்பவம் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக பதவி விலகுகிறேன். யமுனை நதியை சுத்தப்படுத்த தவறிவிட்டோம். மக்களுக்கு ஒரு தூய்மையான யமுனை நதியை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தோம். ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற தவறிவிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் பா.ஜ., கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றொரு வேதனையான விஷயம் என்னவென்றால், மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக, நமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மட்டுமே நாம் போராடி வருகிறோம். இதனால் டெல்லிக்கு உண்மையான முன்னேற்றம் ஏற்படாது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. டெல்லி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் எனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளேன், அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.
அதனால்தான், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது, எனவே ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். இந்த பயணம் முழுவதும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் கருணைக்கும் எனது கட்சி சகாக்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்த செய்தி வந்துள்ளது.
Read more ; விபச்சாரமாக நடத்துறீங்க? வீட்டுக்குள் புகுந்த ஊர் மக்கள்.. தாய் மகள் மீது கொடூர தாக்குதல்..!!