முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Serial | மெகா தொடரில் நடிக்கும் தளபதி விஜய்யின் நண்பர்..!! நாயகி யார் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!

04:41 PM Mar 04, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சன் டிவியில் புதிதாக தொடங்கவுள்ள மெகா தொடரில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ், ஹீரோவாகவும் ‘ஆபீஸ்’ சீரியலில் நடித்த ஸ்ருதி ராஜ் நாயகியாகவும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

‘லட்சுமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய்யின் நெருங்கிய நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் நடிக்க இருக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. சன் டிவியில் ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும், இதில் சஞ்சீவ் ஜோடியாக ’தென்றல்’ ’ஆபீஸ்’ உட்பட பல சீரியல்களில் நடித்த ஸ்ருதி ராஜ் தான் நாயகியாக நடிகை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியல் ப்ரோமோ வீடியோவில் ’திருமணத்திற்கு பின்னரும் என் குடும்பத்திற்கு தான் என் சம்பளத்தை கொடுப்பேன் என்று ஸ்ருதிராஜ் நிபந்தனை விதிக்க, திருமணத்திற்கு பிறகு என் மருமகள் என் கையில் தான் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று சஞ்சீவ் தாயார் நிபந்தனை விதிக்க இருவரும் ஒரு கணக்குப் போடும்போது கடவுள் ஒரு கணக்கு போடுவதாக ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், மற்ற சீரியல்கள் போலவே இந்த சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த பிளான்..!! இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு..!!

Advertisement
Next Article