முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

3 வருடத்திற்கு முன் நடந்த விவாகரத்து; கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகையின் புகைப்படம் வைரல்!

serial actress is pregnant after 3 years of divorce
04:31 PM Nov 08, 2024 IST | Saranya
Advertisement

சினிமா நடிகைகளுக்கு எத்தனை மவுசு இருக்கிறதோ அதே அளவு மவுசு சீரியல் நடிகைகளுக்கும் உள்ளது. ஆம், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளை தான் அதிகம் பிடிக்கும். சீரியல் நடிகைகளும் குறைந்தவர்கள் அல்ல, பேர் அழகிகளாக மட்டும் இல்லாமல், தங்களின் நடிப்பிலும் சிறந்து விளங்குவது உண்டு. அந்த வகையில், தனது அழகாலும், நடிப்பாலும் பல ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நிவேதிதா பங்கஜ் . துணை கதாபாத்திரத்தில் நடித்து, பின் சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை நிவேதிதா பங்கஜ். ராதிகா சரத்குமார் இயக்கத்தில் வெளியான வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர் இவர்.

Advertisement

பின்னர், கல்யாண பரிசு, மகராசி, திருமகள், சுந்தரி என பல சீரியல்களில் நடித்தவர் இவர். கடந்த 2019 - ம் ஆண்டு, இவர் மகராசி சீரியலில் நடித்து கொண்டிருந்த போது, அவருடன் நடித்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நிவேதிதா பங்கஜ் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். ஆனால் அவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்கவில்லை. இதனால் இவர் குணசித்திர கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், மகராசி சீரியலில் கதாநாயகனாக நடித்த சுரேந்தருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கில் தள்ளிவிட்டார். அப்போது தன் முதல் கணவருடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆனதாகவும் தற்போது சுரேந்தரை காதலிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஒன்பது மாதமே ஆன நிலையில், நிவேதிதா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளம் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த வாழ்க்கையாவது உங்களுக்கு பிடித்தது போல் அமையட்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Read more: கடற்கரையில் கேட்ட முனங்கள் சத்தம்; ஒருத்தர் பின் ஒருத்தராக சிறுமிக்கு செய்த காரியம்..

Tags :
baby showerdivorceHeroPregnantserial actress
Advertisement
Next Article