முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிக்கும் ஆதாரம்..! செந்தில்பாலாஜி பணமோசடி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்...!

Senthilbalaji money laundering case witness hearing begins.
05:35 AM Aug 17, 2024 IST | Vignesh
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்கியது.

Advertisement

பண மோசடி வழக்கில் சாட்சி விசாரணை நடவடிக்கைகள் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன் தொடங்கியது. விசாரணையின் போது, கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய முதன்மை மேலாளர், நீதிமன்றத்தில் ஆஜரானார். செந்தில்பாலாஜி, அவரது மனைவி மற்றும் அவரது சகோதரரின் கணக்குகளின் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக, அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தினார்.

ஆனால், செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாட்சியின் பல வாக்குமூலங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, வழக்கு தொடர்பான பிற வங்கி ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர், தலைமை வங்கி மேலாளரிடம் குறுக்கு விசாரணை நடத்த நீதிமன்றத்தின் அனுமதி கோரினார். கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
Enforcement directorateinvestigationSenthil Balaji
Advertisement
Next Article