செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்..!! பக்கவாத அபாயம்..!! இன்று தான் கடைசி..!! பரபரப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த 6ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தபட்டார். பின்னர், நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி உடல்நல குறைவால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த நவம்பர் 20ஆம் தேதி அவருடைய ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை செந்தில் பாலாஜி தரப்பு சமர்ப்பித்தது.
செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ ஸ்கேனை பார்த்தால் அவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார். இதையடுத்து, இந்த ஜாமீன் வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிமன்ற காவல் முடிவதால் அவர் மருத்துவமனையில் இருந்தே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.