முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Senthil Balaji | ’செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முகாந்திரம் இல்லை’..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

11:33 AM Feb 28, 2024 IST | 1newsnationuser6
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணை வட்டத்தில் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கானது எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

இதற்கிடையில் பல்வேறு முறை உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரியுள்ளது. இதுவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல்வேறு முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

Read More : PM Modi | ரூ.17,300 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!! என்னென்ன தெரியுமா..?

இந்த ஜாமீன் மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

English Summary : Senthil Balaji can't grant bail

Read More : 9,827 கிமீ..!! அனல் பறந்த பாதயாத்திரை..!! இது ஒரு வாழ்நாள் அனுபவம்..!! Annamalai பெருமிதம்..!!

Advertisement
Next Article