செந்தில் பாலாஜிக்கு அடி மேல் அடி..!! ஜாமீன் வழக்கின் தீர்ப்பு..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
தீா்ப்பு எப்போது வரும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையில், செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ள 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கிடையே, போக்குவரத்துத் துறையில் 2,175 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அடங்கிய குறிப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது செந்தில் பாலாஜிக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
Read More : அடடே..!! இந்த 5 மாவட்டங்கள் தான் இன்னைக்கு டார்கெட்..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை..!!