செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..!! ஜாமீன் வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்..!! என்ன சொல்லிருக்கு தெரியுமா..?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடைய நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை ஜாமீனும் கிடைக்காததால், உடல்நலக்குறைவுடன் சிறையிலேயே இருந்து வருகிறார்.
மேலும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்ட வழக்குகள். நான் எங்கும் தப்பிச் செல்ல மாட்டேன் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றம் கூறிய விளக்கங்களை சொலிசிட்டர் ஜெனரல் ஆகஸ்ட் 20ஆம் தேதி அளிக்க உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் வழக்காக பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜாமீன் மனு விசாரணை முடிந்து நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More : புதிதாக விண்ணப்பித்துள்ளீர்களா..? பெண்களே இன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வரப்போகுது..!!