Senthil Balaji | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..? சிறையிலிருந்து வெளியே வருகிறாரா..? இன்று தீர்ப்பு..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். அவர் பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, அதன்பின் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று காலை இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்றாலும் எம்எல்ஏவாக இருக்கிறார் என்றும் அதனால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்புள்ளதாக கூறி அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary : Will Senthil Balaji get bail today?