'புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு..' உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!
பி.எஸ்.இயின் 30-பங்கு சென்செக்ஸ் முந்தைய முடிவான 75,410.39 உடன் ஒப்பிடும்போது, 245.07 அல்லது 0.32 சதவீதம் அதிகரித்து, 75,655.46 என்ற இதுவரை இல்லாத உயர்வில் இன்று பங்குச்சந்தை தொடங்கியது. அதே போல் நிஃப்டி 23,000 புள்ளிகளை கடந்து தொடங்கியது.
இந்தியாவில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் பொது தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள வேளையில், உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும் நோக்குடன் அதேநேரத்தில் பங்குச்சந்தையில் ஏற்படும் வளர்ச்சியை இழக்க கூடாது என்ற ஒற்றை இலக்குடன் ப்ளூ சிப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாகவே இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.
பி.எஸ்.இயின் 30-பங்கு சென்செக்ஸ் முந்தைய முடிவான 75,410.39 உடன் ஒப்பிடும்போது, 245.07 அல்லது 0.32 சதவீதம் அதிகரித்து, 75,655.46 என்ற இதுவரை இல்லாத உயர்வில் இன்று பங்குச்சந்தை தொடங்கியது. அதே போல் நிஃப்டி 23,000 புள்ளிகளை கடந்து தொடங்கியது. நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 81.85 புள்ளிகள் அல்லது 0.36 சதவீதம் உயர்ந்து அதிகபட்சமாக 23,038.95 புள்ளிகளில் தொடங்கியது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் உள்ள டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் உயர்வில் திறந்தது மட்டும் அல்லாமல் 1 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது. விப்ரோ, மாருதி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ், சன் பார்மா, ஆசியன் பெயின்ட்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் உள்ளன.
திங்கட்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை நிலையானதாக இருந்தது. OPEC+ நாடுகளின் கூட்டம் ஜூன் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உற்பத்திக் குறைக்கும் முடிவுகளை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்-யின் ஆகஸ்ட் மாத பியூச்சர் ஒப்பந்தம் ஒரு பேரல் 27 சென்ட் உயர்ந்து 82.11 டாலராக உள்ளது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் (ஜூலை ஒப்பந்தம்) ஒரு பேரல் 30 சென்ட் உயர்ந்து 78.02 டாலராக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 4 காசு உயர்ந்து ரூ.83.06 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.02% சரிந்து 104.7 என்ற அளவில் உள்ளது. இதுவும் பங்குச்சந்தை முதலீட்டில் குறைய முக்கிய காரணமாகும்.
Read more ; மூளையில் கட்டி..!! இந்த அறிகுறிகள் இருக்கா..? அசால்ட்டா இருக்காதீங்க..!! உடனே மருத்துவரிடம் போங்க..!!