For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திரையுலகில் பரபரப்பு..!! ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா..!! காவல்துறை வழக்குப்பதிவு..!!

11:11 AM Apr 01, 2024 IST | Chella
திரையுலகில் பரபரப்பு     ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா     காவல்துறை வழக்குப்பதிவு
Advertisement

ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது இவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த நடிகை சரண்யா, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாகத் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி, சிசிடிவி காட்சிகளை சமர்பித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் ஜோடியாக 'நாயகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர், ’எம்டன் மகன்’, ‘விஐபி’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோவின் அம்மாவாக சிறப்பான நடிப்பைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது இவரது கைவசம் ‘இடி முழக்கம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘பிரதர்’ உள்ளிட்டப் படங்கள் கைவசம் உள்ளது.

Read More : Gold Rate | வரலாறு காணாத உச்சம்..!! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Advertisement