முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ED வளையத்திற்குள் தமிழக சீனியர் அமைச்சர்கள்!… 'திருச்சி' அடுத்து இவர்தான்!… மறைமுகமாக கூறிய ஹெச்.ராஜா!

03:22 PM Jan 03, 2024 IST | 1newsnationuser3
Advertisement

செந்தில் பாலாஜி, பொன்முடியை போலவே அடுத்தடுத்து தமிழக சீனியர் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் அடுத்து திருச்சியா, திருச்சி இல்லையா என்பது எனக்கு தெரியாது” என்று மறைமுகமாக அமைச்சர் கே.என்.நேருவை ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அமலாக்கத் துறையால் கைதாகி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் பொன்முடி தரப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், அடுத்ததாக சீனியர் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “பாஜக சொல்லித்தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தமிழகத்திலுள்ள சீனியர் அமைச்சர்கள் அனைவரும் அமலாக்கத் துறை கண்காணிப்பு வளையத்திற்குள்தான் உள்ளனர். செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, பொன்முடி, துரைமுருகன் என அனைவரும் சோதனையில் தான் இருக்கிறார்கள். ஊழல் வழக்கில் தங்கள் அமைச்சர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று திமுக மார்தட்டி வந்தது.

இப்போது ஒவ்வொருவராக சிறை செல்ல ஆரம்பித்துள்ளனர். முதலாவதாக பொன்முடி சிறைக்கு போகப் போகிறார். இன்னும் 15 அல்லது 20 நாட்களில் அவரை நாம் சிறைக்கு வழியனுப்பி வைக்கலாம். அடுத்தடுத்த அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். அது திருச்சியா, திருச்சி இல்லையா என்பது எனக்கு தெரியாது” என்று தெரிவித்தார். திருச்சி என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவைத்தான் ஹெச்.ராஜா மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
EDED வளையத்தில் சீனியர் அமைச்சர்கள்senior ministersதிருச்சிஹெச்.ராஜா
Advertisement
Next Article