மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!! உடல்நலம் கவலைக்கிடம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு 72 வயதாகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில், அவருடைய ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து, அவருக்கு சுவாச கருவி பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொட்ர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீதாராம் யெசுசூரியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரியின் வயது 72 ஆகும். சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி அவருக்கு தீவிர காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவம்னையில் தீவிர சிகிச்சை பிரிவில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீதாராம் யெச்சூரி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
Read more ; கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கே.. அதானி குழுமத்திற்கு கென்யா நீதிமன்றம் போட்ட தடை..!!