முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உதவித்தொகை (Allowance) ரூ.1,500/- ஆக உயர்வு.! அரசு புதிய அறிவிப்பு.!

03:43 PM Feb 18, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தமிழக அரசின் சார்பில் முதியோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகையாக(Allowance) ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 1700 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Advertisement

இந்நிலையில் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டு புதிய அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அரசு உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. விதவைகள் மற்றும் முதியோருக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,200 வழங்கப்படும் என அரசாணை தெரிவித்திருந்தது.

உதவித்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த 7 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் இந்தத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவி திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது.

English Summary:
Govt increased the allowance of senior citizens, widows and physically challenged people. Govt will start distributing soon

Tags :
governmentpensionphysicaly challengedwidow
Advertisement
Next Article