மீண்டும் ஆளுநராக ஆர்.என்.ரவி தொடர்ந்தால் வழக்கு..!! - அமித்ஷாவிற்கு பறந்த கடிதம்
தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் ஆர் என் ரவியின் பதவிக்காலமானது இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. இவர் முதன்முதலாக நாகலாந்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழித்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழகத்தில் 3 வருடம் என அவரது 5 ஆண்டு கால பதவியானது முடிவடைய உள்ளது. இச்சமயத்தில் தான் தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யாராக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பதவியில் இருக்கும் ஆளுநரை இரண்டாவது முறையாக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை என குறிப்பிட்டுள்ள மூத்த வழக்கறிஞர், ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா? புதிய ஆளுநர் நியமிக்கும் வரை ஆர்.என்.ரவியே தமிழகத்தின் ஆளுநராக நீடிக்கச் செய்யும் திட்டம் உள்ளதா? ஆர்.என்.ரவிக்கு பிறகு புதிய ஆளுநர் நியமிக்கும் திட்டம் உள்ளதா என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Read more ; விவசாயி வயிற்றில் 16 இன்ச் முழு சுரைக்காய்..!! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் குழு!!