இனி அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வு..!! வெளியான அறிவிப்பு..!!
செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டுமென என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்தாண்டு நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நாளில் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினார். அதனால், அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒரே நேரத்தில் தொடங்கும் என்றும், தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனர் கார்மேகம், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், கல்லூரி கல்வி மண்டல இயக்குனர்கள், அனைத்து அரசு, அரசு உதவிப்பெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டுமென என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ள இயக்ககம், செமஸ்டர் தேர்வுகளை நவம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், தேர்வு முடிவுகளை டிசம்பர் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Read More : உங்களுக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லையா..? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? உடனே இதை பண்ணுங்க..!!