முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரசிகர்களுக்கு செம விருந்து..!! ’மகாராஜா’ திரைப்பட ஓடிடி தேதி அறிவிப்பு..!!

Maharaja movie will be released on 1st July on Netflix OTD platform.
06:42 PM Jun 26, 2024 IST | Chella
Advertisement

'மகாராஜா' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisement

குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் 'மகாராஜா'. இப்படம், சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா, பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற மகாராஜா பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக மகாராஜா படத்தை பார்க்க திரையரங்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஒரு முறை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் மீண்டும் படத்தை பார்க்க ஆர்வமாகவுள்ளனர். எப்போது ஓடிடி-யில் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது. அதாவது, மகாராஜா திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் மகாராஜா படத்தை குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் ஓடிடி தளத்தில் வீட்டிலேயே பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

Read More : விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்வு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Tags :
cinemamaharaja movienetflixvijay sethupathi
Advertisement
Next Article