For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்..!! ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடக்கம்..!! முதல்வர் அறிவிப்பு..!!

Chief Minister Mukherjee Stalin has announced that the Tamil Pudhalvan project will be launched on August 9 in Coimbatore.
12:28 PM Jul 31, 2024 IST | Chella
செம குட் நியூஸ்     மாணவர்களுக்கு ரூ 1 000 வழங்கும் திட்டம்     ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடக்கம்     முதல்வர் அறிவிப்பு
Advertisement

தமிழ்ப் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், ”தமிழ்நாட்டில் ரூபாய் 5 ஆயிரம் கோடி வரையிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை அறிவுத் துறையாகவும் செயல்படுகிறது. அறநிலையத் துறைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. கல்விக்கு சாதி உட்பட எதுவும் தடையாக இருக்கக் கூடாது. கல்வியை யாராலும் திருட முடியாது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்படும். கோவையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழ்ப் புதல்வன் திட்டம்

உயர் கல்வியில்‌ பெண்களின்‌ சேர்க்கையை அதிகரிக்கும்‌ நோக்கில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம்‌ அம்மையார்‌ புதுமைப்பெண்‌ திட்டம்‌ பெண்களின்‌ உயர் கல்வியில்‌ பெரும்‌ முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் உயர் கல்விக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதற்காக அண்மையில், ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Read More : விவசாயிகளே செம குட் நியூஸ்..!! இனி உங்கள் நிலத்திற்கு ஆதாரம் இதுதான்..!!

Tags :
Advertisement