முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செம குட் நியூஸ்..!! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65..!! வாகன ஓட்டிகள் நிம்மதி..!!

07:26 AM Apr 09, 2024 IST | Chella
Advertisement

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறது. தருமபுரியில் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் மணி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடசல்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தருமபுரியில் இருந்து கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொப்பூர் கணவாய் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது" என்றார்.

Advertisement

தொடர்ந்து, "10 ஆண்டுகளுக்கு முன்பு கேஸ் சிலிண்டரின் விலை 450 ரூபாயாக இருந்தது. இப்போது 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது தேர்தல் வரப்போகிறது என்பதும் மோடி அழகாக வடை சுட்டுள்ளார். மகளிருக்கு மகளிர் தின பரிசாக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளாராம். அதை நாம் நம்பலாமா? ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய்க்கும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக சொன்னதை செய்வார். கண்டிப்பாக அவை நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

Read More : செம குட் நியூஸ்..!! TNPSC குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு..!! உடனே செக் பண்ணுங்க..!!

Advertisement
Next Article